Pages

Saturday, 23 November 2013

ஜோதிடமும் சில மறைக்கப் பட்ட நிஜங்களும்



இதனால், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இந்து ஜோதிடத்தை வேத ஜோதிடம் என்ற பெயரில் பட்டப்படிப்பு வைத்துள்ளனர். ஜோதிடத்தை பின்பற்றுவோர்,ஜோதிடத்தைத் தொழிலாக பார்ப்போர் அனைவரும் அமெரிக்க வேத ஜோதிட சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டுவருகின்றனர்.http://www.aava.org/ என்பது இவர்களின் இணைய தளமாகும்.இதே போல இங்கிலாந்தில் http://www.bava.org/ என்ற பெயரில் இயங்கி வருகின்றனர்.

நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான்.அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.
(யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் நாடு இங்கிலாந்து .நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான் ).

இன்று வரையிலும் அமெரிக்கா தனது சி.ஐ.ஏ.,உளவாளிகளை நமது ஜோதிடத்தின் மூலமாகவே தேர்வு செய்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

நிலாவிற்கு ஆர்ம்ஸ்ட்ராங்,ஆல்ட்ரின் குழுவைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா.இவர்களைத் தவிர மேலும் 3 குழுக்களுக்கு பயிற்சியளித்து தயாராக வைத்திருந்தது.ஒரு குழுவில் 3 பேர்வீதம் மொத்தம் 9 பேர் தயாராக இருந்தனர்.இந்த 9 பேரின் பிறந்த நேரம்,பிறந்த தேதி, பிறந்த நகரம்-இவற்றுடன் நாசா நிர்வாகிகள் கேரளாவிற்கு நேரில் வந்து பிரபலமான ஜோதிடர்களிடம் ஜோதிட ஆலோசனை கேட்டறிந்தனர்.அந்த நம்பூதிரி ஜோதிடர்களின் வழிகாட்டுதலின் படி ஆர்ம்ஸ்ட்ராங் குழுவை நிலாவிற்கு அனுப்பினர்.

ஒருவர்- மனித உடலோடு விண்வெளிப்பயணம் சென்று திரும்ப வேண்டுமானால் அவரது பிறந்த ஜாதகத்தில் கேது உச்சமாகவும், உடன் செவ்வாய் ஆட்சியாகவும் இருக்க வேண்டும்.

உலக வரலாற்றில் ஜோதிடத்துறைக்கு என கேபினட் மந்திரி பதவியை உருவாக்கியவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆவார்.அவர் தனது ஆஸ்தான ஜோதிடரை தனது மந்திரி சபையில் 2 ஆண்டுகள் வரை மந்திரியாக நியமித்திருந்தார்.


உலக வரலாற்றில் கட்சிஆரம்பித்த வெறும் 9 மாதங்களில் ஆட்சியைப்பிடித்ததும் என்.டி.ராமாராவ் அவர்கள் மட்டுமே!
அதற்கு முழு முதற்காரணங்களில் ஒன்று கட்சியை ஆரம்பித்த நேரமே!



சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்



1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் திருவரங்கம்.
9. அகத்தியர் திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு
பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில்
சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்
திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து
உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக
அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி
உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப்
பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில்
உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25
கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

Monday, 18 November 2013

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?

 
கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.


இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.

2) அதில்  Storage  சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.

 
4) பின்னர் அதில் Right click செய்யது  Shrink Volume என்பதை click செய்யுங்கள்.    அதன் பின்னர் windows தன்னியக்கமாக  அந்த Partition  இல் உள்ள  free space ன் அளவை காட்டும்.

5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.

 
6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய  Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.

7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.

8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை  தெரிவு செய்யுங்கள்.

9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).

10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

11) பின்னர் Format Settings  இல் NTFS என்பதை File System  பிரிவில் தெரிவு செய்யுங்கள்.  Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).

 
12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது. 
 

கணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும்.



கணிணி வாங்கிய‌ புதியதில் வேக மாக இயங்கிய நம் கணினி சில மாதங்களி ல் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக் காதது தான் மிக முக்கியமான காரண ம்.
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவி ல் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.

காரணங்கள்:

  1. 1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. 2. நிறையProgram-கள் இயங்கிக்கொண்டு இருப்பது.
  3. 3. Data Corruption
  4. 4. அதிக சூடாகுதல்
  5. 5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  6. 6. Hardware Problems
  7. 7. Driver பிரச்சினை

இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :

உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.

Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் 



மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம்கவனிக்க வேண்டும்.

Run Scan Disk – இது Hard Disk – இல் ஏதே னும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.

இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check
இதில் Start என்பதை கிளிக் செய்யவும்.
 Scan ஆரம்பித்து விடும்.

அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.

Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.

தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக் ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக் கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். 

CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப் பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.

 
கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக
 
 
 
நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக
இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.
 
Virus பிரச்சினைகள்
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.

Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் 
 
மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் 
 
 
கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart 
செய் யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.

இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். 

இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.

மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.

கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சி னையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். 

இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.

RAM Memory Increase செய்தல்
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம்மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). 

புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.

உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.

Registry Cleaner பயன்படுத்துதல்
பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.

குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.
 
 
Operation System இன்ஸ்டால் செய்தல்

மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.

Hardware பிரச்சினைகள்

மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.
 
 
 
 
 

Friday, 15 November 2013

மாந்திரீக இரகசியம்




மாந்திரீகம் என்பது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இறைவன் அருளால் கண்டறிந்த ஒரு அறிய கலை.


கணவரை பிரிந்து வாழும் பெண் மீண்டும் கணவனோடு சேர்ந்து வாழ ஓலைச்சுவடி முறை.





நீங்கள் மாந்திரீகம் பற்றி தெரிந்து கொள்ள இதோ ஒரு அருமையான வலைதளம்.

கீழேயுள்ள Link  மூலம் சென்று மாந்திரீகம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


                                           

                                        1.CLICK HERE என்பதை க்ளிக் செய்யவும்.
 
2. 5 Second காத்திருக்கவும்
 
3.பின்னர் SKIP   என்பதை க்ளிக் செய்யவும்.