ஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மென்பொருள் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது!
ஜாதகங்களைக் கணித்துப் பிரதி போட்டு எடுத்துக் கொள்ளலாம் அல்லது கணினியிலே சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். இது User Friendly Software என்பது குறிப்பிடத்தக்கது!
உங்களுக்கோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பிறந்த ஜாதகம் கணிக்க வேண்டுமென்றால், கீழ்க்கண்ட விபரங்கள் மட்டும் கொடுத்தால் போதும்..!!
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பிறந்த நேரம்
4. பிறந்த ஊரின் பெயர் (கிராமமாக இருந்தால் அருகில் உள்ள நகரத்தின் பெயர் (City or Town)
30 கிலோ மீட்டர் சுற்றுக்குள் உள்ள பெரிய ஊரின் பெயரைக் கொடுக்கலாம்..!
இந்த மென்பொருள் பல அம்சங்களோடு ஜாதங்களைக் கணித்துக் கொடுக்கும் திறன் பெற்றது!. இராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், பாவச்சக்கரம், தாசாபுத்திகள், அஷ்டவர்க்கம், ஜாதகத்தில் உள்ள நல்ல/கெட்ட யோகங்கள் இப்படி எல்லா விபரங்களுமே கிடைக்கும்!
இந்த அற்புதமான மென்பொருள் இலவசமாகக் கிடைக்கும் தளத்தின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் கணினியில் தரவிறக்கிப் பதிவு செய்து வைய்யுங்கள்!!
ஊரின் பெயர்களெல்லாம் அதிலேயே உள்ளன.ஒரு வேளை உங்களுடைய நகரம்(city or town) விடுபட்டிருந்தால் அதற்கும் ஒரு வழியிருக்கிறது.
உங்கள் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை தெரியவேண்டும் (latitude & Longitude) அதற்கென்று பிரத்தியேகமாக வேறு ஒரு தளம் உள்ளது.
பல நல்ல உள்ளம்கொண்டவர்கள் சேர்ந்து அதை உருவாக்கியுள்ளார்கள். பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். உலகில் உள்ள 20 இலட்சம் பெரிய, சிறிய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களுக்கும் அதில் அட்சரேகை, தீர்க்கரேகை விபரங்கள் உள்ளன.
பார்த்து பயன்பெறுங்கள்.. இனி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ, நண்பர்களுக்கோ அவர்களின் ஜாதகத்தை உருவாக்கி நண்பர்களின் பாராட்டைப் பெறுங்கள்...!!
எவ்வாறு Download செய்வது?
1.DOWNLOAD HERE என்பதை க்ளிக் செய்யவும்.
2. 5 Second காத்திருக்கவும்
3.பின்னர் SKIP என்பதை க்ளிக் செய்யவும்.
nice
ReplyDelete..........
thank u visit my webpage http://starramesh.blogspot.in
ReplyDeletevery usefull
ReplyDeleteநன்றி.
DeleteThis is wonderful, but what time should we use for India? is it standard?
DeletePlz
ReplyDelete